சாத்தான்குளம் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை, டிச. 22: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கு குறித்து சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சாத்தான் குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது 9 பேரும் நீதிபதி(பொ) தாண்டவன் முன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் விசாரணையை ஜன.4க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>