மதுரை, டிச. 22: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின்பேரில் கட்சியின் விவசாய அணி செயலாளர்கள் சின்னசாமி, விஜயன் ஆகியோர் நிர்வாகிகளை அறிவித்துள்ளனர். மதுரை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக முருகன், துணை அமைப்பாளர்களாக மகாத்மா காந்திநகர் தேவதாஸ், வாகைக்குளம் ராஜேஷ்கண்ணன், வாடிப்பட்டி எஸ்வி பாஸ்கரன், சூர்யாநகர் ரவீந்திரன் காதக்கிணறு சேகர், பனைக்குளம் மழுவேந்தி, அய்யர் பங்களா ரம்யம் எம்.பாண்டி, அய்யப்பன்நாயக்கன்பட்டி மணிவேலு, கருப்பாயூரணி கருணாநிதி, ஒத்தப்பட்டி செந்தில்குமார். சத்திரப்பட்டி ஓம்சக்திநகர் பிரேம்ஆனந்தன், சென்ட்ரல் எக்சைஸ் காலனி பெரியகருப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.