மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு புதூர் தலைமை ஆபீசில் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை, டிச. 22: தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில, இச்சங்கங்களை சேர்ந்த 35 பெண் ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் நேற்று மதுரை கோ,புதூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை ெபாறியாளர் அலுவலகம் முன்பு திரண்டு, மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், அனைவரும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வாயில் பகுதியில் அமர்ந்தனர். இதற்கிடையே தனியார் மூலம், மின்வாரிய ஊழியர்கள் தேர்வு செய்ய அனுமதித்து  பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், மற்ற அவுட்சோர்சிங் பணிகைள ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால், அனைத்து அவுட்சோர்சிங் உத்தரவுகளையும் ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Related Stories:

>