- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- பொருளாளர்
- டி.ஆர்.பாலு
- காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்
- திருவாரூர்...
சென்னை: திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு கூட்டம் நாளை(20ம்தேதி) மற்றும் 21ம்தேதி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொள்கிறார். திருவாரூரில் கே.என்.நேரு, கரூரில் திருச்சி சிவா, கோவை வடக்கில் ஆ.ராசா, கன்னியாகுமரி கிழக்கில் கனிமொழி கருணாநிதி, நாமக்கல் கிழக்கில் அந்தியூர் செல்வராஜ், திருப்பூர் வடக்கில் ஆர்.எஸ்.பாரதி, தஞ்சை வடக்கில் பொன்முடி, திண்டுக்கல் கிழக்கில் பொன்.முத்துராமலிங்கம், மதுரை வடக்கில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஈரோடு தெற்கில் கோவி லெனின், சென்னை வடக்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், விருதுநகர் வடக்கில் கம்பம் செல்வேந்திரன், தஞ்சை மத்திய மாவட்டத்தில் சபாபதி மோகன் என திமுக அனைத்து மாவட்டங்களிலும் திமுக தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
