வியாபாரிகள் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு போர்வை

வத்தலக்குண்டு, டிச. 22: வத்தலக்குண்டுவில் அனைத்து ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் அபுதாஹீர் முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். செயற்குழு உறுப்பினர் அன்வர்தீன் வரவேற்றார். பொருளாளர் சுகுமாரன் நிதி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ‘கடை வீதியில் உள்ள குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் தினசரி அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை துணைச் செயலர் பழனிவேல் வாசித்தார். வர்த்தக சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பாலசாயிகுமார், துணைத்தலைவர் ஞானசேகர் ஆகியோர் பேசினர். சுகாதார ஆய்வாளர் அகமது ரிபாய் தொகுத்து வழங்கினார். துணைப் பொருளாளர் ராஜேஷ் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் நௌசரத் அலி நன்றி கூறினார். இதையடுத்து நிலக்கோட்டையில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்திற்கு போர்வைகள் வழங்கினர்.

Related Stories:

>