ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு மகளிடம் ஏன் தகராறு செய்கிறாய் என கேட்ட மாமனாருக்கு கத்திக்குத்து

திருச்சி, டிச. 22: திருச்சி ஏர்போர்ட் குளவாய்ப்பட்டியை சேர்ந்த சண்முகம்(43). இவரது மனைவி மார்கிரேட் மேரி. கட்டிட தொழிலாளியான சண்முகம், தினமும் மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதே போல் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து மார்கிரேட்மேரி, தந்தை ரெங்கசாமியிடம் கூறி அழுதுள்ளார். மறுநாள் ஸ்டார் நகர் அருகே ரேஷன் கடை அருகே நின்றிருந்த மருமகன் சண்முகத்திடம் ஏன் தினமும் தகராறில் ஈடுபட்டு மகளை அடித்து துன்புறுத்துகிறாய் என கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த சண்முகம், மகளை ஒழுங்காக வளர்க்க முடியவில்லை, நீ ஏன் கேட்கிறாய் என கேட்டு தாக்கி, கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த ரெங்கசாமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் எஸ்ஐ கலியமூர்த்தி வழக்குப்பதிந்து தப்பியோடிய சண்முகத்தை தேடி வருகிறார்.

Related Stories:

>