மருமகனுக்கு வலை நினைவு பரிசு வழங்கல் மருத்துவ முகாமில் இலவச ஆலோசனை சாலையோர வியாபாரிகள் திடீர் தர்ணா

திருச்சி, டிச.22: திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நாகமங்கலத்தை சேர்ந்த சாலையோர வியாபாரிகள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலத்தில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி கடந்த 20 ஆண்டாக 20 கடைகள் செயல்பட்டு வந்தன. தொடர் மழை காரணமாக நாகமங்கலம் பிருந்தாவனம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்நிலையில் மணிகண்டம் போலீசார் எங்கள் கடைகளை காலி செய்யும்படி மிரட்டி வருகின்றனர். கொரானா ஊரடங்கால் கடைகள் திறக்காமல் தற்போதுதான் தொழில் செய்து வருகிறோம். இப்போது கடைகளை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது. எனவே கடைகளை காலி செய்ய வற்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>