சென்னை: தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் செப்.20, 21ல் திமுக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று தலைமைகழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க கழகத் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், கழக மாவட்ட வாரியாக பின்வரும் அட்டவணைப்படி நடைபெறும். 20.09.205 சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றயுள்ளனர்.
காஞ்சிபுரம் வடக்கு-கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., திருவாரூர்-முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கரூர் – துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., கோவை வடக்கு – துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி, கன்னியாகுமரி கிழக்கு – துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணநிதி, எம்.பி, நாமக்கல் கிழக்கு – துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., திருப்பூர் வடக்கு – அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தஞ்சை வடக்கு-முனைவர் க.பொன்முடி, திண்டுக்கல் கிழக்கு- பொன். முத்துராமலிங்கம், மதுரை வடக்கு – எஸ்.எஸ். பழநிமாணிக்கம், திருவண்ணாமலை வடக்கு- சுப.வீரபாண்டியன், ஈரோடு தெற்கு – கோவி.லெனின், சென்னை வடக்கு – கவிஞர் மனுஷ்யபுத்திரன், விருதுநகர் வடக்கு – கம்பம் பெ.செல்வேந்திரன்,
தஞ்சை மத்திய – சபாபதி மோகன், தருமபுரி மேற்கு – பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திருநெல்வேலி கிழக்கு – ப. தாயகம் கவி, கடலூர் கிழக்கு – வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி, வேலூர் – டாக்டர் எழிலன் நாகநாதன், பெரம்பலூர் – ஏ.கே.எஸ்.விஜயன், சேலம் மேற்கு – வழக்கறிஞர் இ.பரந்தாமன்
திருவள்ளூர் மத்திய – சி.வி.எம்.பி. எழிலரசன், திருப்பூர் கிழக்கு – கவிஞர் சல்மா, எம்.பி.,திருநெல்வேலி மத்திய – வே.மதிமாறன், சேலம் மத்திய – சூர்யா கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் வடக்கு – வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ்
தேனி தெற்கு – ஈரோடு இறைவன், திருச்சி தெற்கு – தமிழன் பிரசன்னா, புதுக்கோட்டை வடக்கு – சைதை சாதிக், மதுரை தெற்கு – எஸ்.கே.பி.கருணா, சேலம் கிழக்கு – வாகை சந்திரசேகர், தென்காசி வடக்கு – வழக்கறிஞர் மதிவதனி, தென்காசி வடக்கு – ஆண்டாள் பிரியதர்ஷினி, தூத்துக்குடி வடக்கு – சூர்யா வெற்றிகொண்டான், கோவை மாநகர் – சூர்யா சேவியர், திருச்சி வடக்கு – டான் அசோக், கள்ளக்குறிச்சி தெற்கு – தமிழ் கா.அமுதரசன், கிருஷ்ணகிரி மேற்கு- வி.சி. சந்திரகுமார், திருப்பூர் தெற்கு – சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றயுள்ளனர்.
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சாளர்களுடன், உள்ளூர் பேச்சாளர்களையும் பயன்படுத்தி இக்கூட்டங்களை அனைத்து மாவட்டக் கழகங்களும் மிகச் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
