தா.பேட்டை அருகே துணிகரம் வீடு புகுந்து நகை திருட்டு

தா.பேட்டை, டிச.22: தா.பேட்டை அடுத்த மேட்டுபாளையம் பெருமாள் கோயில் அருகே வசிப்பவர் பாஸ்கர். திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த 8ம் தேதி ஈரோட்டில் வசிக்கும் இவரது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று மீண்டும் ஊருக்கு திரும்பியவர் வீட்டின் பின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தா. பேட்டை போலீசில் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: