×

விராலிமலை அருகே பாழடைந்த கிணற்றில் இறந்து கிடந்த 10 மயில்கள்

விராலிமலை, டிச.22: விராலிமலை அருகே பயன்படாத விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் இறந்து கிடத்த 10க்கும் மயில்கள் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூர் பெரியகுளம் பாசன பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் துர்நாற்றம் அடிக்கவே அருகில் இருந்தவர்கள் கிணற்றை எட்டி பார்த்துள்ளனர். அப்போது கிணற்றினுள் 10க்கும் மேற்பட்ட மயில்கள் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளன. இதுகுறித்து விராலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு இப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் வயலில் கதிர்களை சேதப்படுத்தும் எலிகளுக்கு வைத்த பூச்சி மருந்தை தின்று மயில்கள் இறந்திருக்கலாம் என்றும், இவ்வாறு கடந்த 10 தினங்களுக்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக இறந்த மயில்களை அருகில் உள்ள விவசாயிகள் பயன்படாத நிலையில் உள்ள கிணற்றில் வீசி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. விராலிமலை அருகே பயன்படாத விவசாய கிணற்றில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் அழுகிய நிலையில் இறந்து கிடத்த சம்பவம் இப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...