புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, டிச. 22: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 11,342 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,115 ஆக உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடர்கிறது. இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 73 ஆக குறைந்துள்ளது.

Related Stories:

>