×

பொன்னமராவதியில் பெரியார் பிறந்த நாள்

பொன்னமராவதி, செப்.18: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொன்னமராவதி பேருந்து நிலையம் முன் பெரியார் உருவப்படம் வைத்து ஒன்றியச்செயலாளர் மாவலி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, திக மாவட்ட இணைச் செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொறுப்பாளர் மனோகரன், ஆறுமுகம், விசிக மலைதேவேந்திரன், திமுக நிர்வாகிகள் ஆலவயல் முரளி சுப்பையா, மகேஸ்வரன், செல்வம், சரவணன், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Periyar ,Ponnamaravathi ,Dravidar Kazhagam ,Ponnamaravathi, Pudukkottai district ,Union Secretary ,Mavali ,
× RELATED ஓய்வூதியர் தின விழா