×

கனிமொழி உள்பட 2 பேர் கட்சி வளர்ச்சி நிதிக்காக விருது ரொக்க பணம் வழங்கல்

கரூர், செப். 18: கரூர் திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டியில் நேற்று மாலை திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் விரூ.து கனிமொழிக்கும், அண்ணா விரூ.து சீத்தாராமனுக்கும், கலைஞர் விரூ.து ராமச்சந்திரனுககும், பாவேந்தர் பாரதிதாசன் விரூ.து குளித்தலை சிவராமனின் உறவினருக்கும், பேராசிரியர் விரூ.து குளித்தலை சிவராமனுக்கும், மு.க.ஸ்டாலின் விருது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார்.

தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றுகையில், விரூ.துகள் பெற்றவர்களில் கனிமொழி உட்பட இரண்டு பேர், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.. 3லட்சத்தை, கட்சியின் வளர்ச்சி நிதிக்காக வழங்கியுள்ளனர் என விழா மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Kanimozhi ,Karur ,DMK ,Karur Trichy Bypass Road Kodangipatti ,Periyar ,Seetharam ,Anna ,Kalaignar ,Ramachandra ,Pavendar Bharathidasan ,Kulithalai Sivaraman ,
× RELATED குகை வழிப்பாதையில் குடிமகன்கள் அட்டகாசம்