×

சாதி ஆணவ படுகொலை இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரமுத்து – மாலினி. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் நேசித்து வந்துள்ளனர்.

இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள முடியாத மாலினியின் குடும்பத்தினர் வைரமுத்துவை படுகொலை செய்துள்ளனர். இந்த ஆணவ கொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகள் தனிச் சிறப்பு சட்டத்தின் இன்றியமையாத் தேவையை வலியுறுத்துகிறது என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

Tags : Indian Communist Party ,Chennai ,State Secretary of the ,Communist Party ,of ,India ,M. Veerapandian ,Vairamuthu ,Malini ,Adiamangalam ,Mayiladuthurai district ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...