×

பெரம்பலூருக்கு 25ம் தேதி உதயநிதி வருகை குறித்து திமுக இளைஞரணியினர் ஆலோசனை

பெரம்பலூர், டிச. 22: பெரம்பலூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் தி.மு.க மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் கலந்து கொண்டு, மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் 25ம்தேதி அன்று ஸ்டாலினின் குரல், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுப் பயணம் வருகை குறித்து பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், அன்பழகன், தங்க. கமல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,visit ,Udayanithi ,Perambalur ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்