×

கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, டிச.22: 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும்பெற்றோர் ஆசிரியர் கழக தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்ககோரி மேல்நிலைபள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈடுபட்டனர். மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.. பொதுச் செயலாளர் ரங்கநாதன், மாநில பொருளாளர் செந்தில்நாதன், மாநில துணைத்தலைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து மூத்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர் பணி காலத்தில் 50 சதவீத விழுக்காடு ஓய்வூதியத்தில் கணக்கிட்டு வழங்க அரசாணை வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பெற்றோர் ஆசிரியர் கழக தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Demonstration ,teachers ,high school ,
× RELATED வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி