டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு நியாயவிலை கடை பணியாளர்கள் பச்சைபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

நாகை, டிச.22: நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பச்சைநிற பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் பச்சை நிற பேட்ஜ் அணிந்து நாகை கூட்டுறவு பண்டகசாலை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணன், வட்ட கிளை தலைவர் ரமணராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் பேசினார்.

10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்த விற்பனையாளர்களுக்கு தேர்வுநிலை மற்றும் சிறப்பு தேர்வு நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மருத்துவபடி உயர்வு உத்தரவுகளை உடனே நிறைவேற்ற வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது ஆகிய கோஷங்களை எழுப்பி பச்சை நிற பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், வட்ட செயலாளர் மாருதி, துணைத் தலைவர் ஜெகன்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>