×

தனியார்மயமாக்கலை கண்டித்து கரூரில் மின் ஊழியர் கூட்டுகுழு காத்திருப்பு போராட்டம்

கரூர், டிச. 22: தனியார் மயமாக்கலை கண்டித்து கரூர் மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு கரூர் மின் வட்டக் கூட்டுக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கூட்டுக்குழுவின் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தனபால், செல்வராஜ், பால்ராஜ் உட்பட 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தை, தனியார் மயக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : group protests ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்