குச்சிகிழங்கு பறிக்கும் பணி மும்முரம் அணைப்புதூர் பகுதியில் தனியார் கிணறு அமைக்கும் பணியால் நீர்நிலைகள் வறண்டு விடும் அபாயம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கரூர், டிச. 22: அணைப்புதூர் பகுதியில் தனியார் கிணறு அமைக்கும் பணியால் நீர் நிலைகள் வற்றி விடும் சூழல் ஏற்படும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சின்னதாராபுரம் பகுதிக்குட்பட்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதார சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அணைப்புதூர் பகுதியில் மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் பொதுமக்களின் பங்களிப்பும் சேர்த்து சுஜல்தாரா என்ற கூட்டு குடிநீர் திட்டம் 2003ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் கிணறு, மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் இந்த பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது, இந்த பகுதியில் பெரிய கிணறு அமைக்கும் பணி தனியார் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால், அருகில் உள்ள நீர்நிலைகள் வற்றி விடும் சூழல் ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>