தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் கடம்பூர்ராஜூ பேச்சு

தூத்துக்குடி, டிச. 21: தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ. தலைமை வகித்தார். சின்னப்பன் எம்எல்ஏ. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர்  கடம்பூர் ராஜூ, மாநில அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது  பொற்கால ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்து வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே மீண்டும் ஆட்சி அமைக்கும். பொது மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2500ஐ முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.

முதல்வர் நாளை கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு செல்கிறார். விழாவில் பங்கேற்ற பிறகு சென்னைக்கு புறப்படுகிறார் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்பு செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கற்ற பாடங்கள் ஒரு போதும் மறக்காது. அதை அப்படியே செயலாக்கி ஜெயலலிதா வழியில் அனைத்து திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கொடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் இளைஞர், இளம்பெண்கள் குழு, மகளிர் குழு, வாக்குச்சாவடி முகவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படாத சில வாக்குச்சாவடிகளில் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், மாவட்ட பஞ்.துணைத்தலைவர் செல்வக்குமார், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கேஆர்எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்  வீரபாகு, துணைச்செயலாளர் வெயிலுமுத்து, எம்ஜிஆர் மன்ற செயலர் ஏசாதுரை, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலர் விஜயகுமார்,  மருத்துவ அணி செயலாளர் ராஜசேகர், மத்திய பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், துணைச்செயலாளர்கள் சோபன், சகாயராஜா, இளைஞர் பாசறை செயலா ளர் தன்ராஜ் பங்கேற்றனர்.

Related Stories:

>