×

அம்மன்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

உடன்குடி, டிச. 21: உடன்குடி அருகே அம்மன்புரத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி போட்டியில் முதலிடம் பிடித்த தீதத்தாபுரம் அணிக்கு ரூ.10ஆயிரம், வெற்றி கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த அம்மன்புரம் அணிக்கு ரூ.7ஆயிரம், கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த வெள்ளாளன்விளை அணிக்கு ரூ.5ஆயிரம், கோப்பையும், நான்காமிடம் பிடித்த மாநாடு அணிக்கு ரூ.3ஆயிரம், கோப்பையும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினருக்கு உடன்குடி ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் பரிசுகளை வழங்கினார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், யூனியன் கவுன்சிலர்கள் செந்தில், லேபோரின், கிளை செயலாளர்கள் மகாராஜா, ஜெயபாண்டி, விஜயகுமார், சரவணன், சதீஷ், இளங்கோ, ராஜேஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Stalin ,Udayanithi ,birthday cricket match ,
× RELATED மாணவர்களுக்கு, சமூகநீதிக்கு,...