கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு தொடர் ஜோதி: அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி, டிச. 21: கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு தொடர் ஜோதியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 36ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாராயணசாமி நாயுடு படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து கோவில்பட்டியிலிருந்து நாராயணசாமி நாயுடு சொந்த ஊரான வைய்யம்பாளையம் வரை தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்எல்ஏ, அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைசேர்மன் பழனிசாமி, முன்னாள் துணைசேர்மன் சுப்புராஜ், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரைபாண்டியன், வினோபாஜி, கருப்பசாமி, நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் வேலுமணி, செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் மற்றும் வெள்ளத்துரை, அருணாசலசாமி, பாபு, செல்வகுமார், சுதா, போடுசாமி உள்பட பலர் பங்ேகற்றனர்.

Related Stories:

>