வாசுதேவநல்லூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிவகிரி, டிச.21: வாசுதேவநல்லூரில் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நடந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மனோகரன் எம்எல்ஏ பங்கேற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வாசுதேவநல்லூரில் நடந்த இக்கூட்டத்திற்கு மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார்.

முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் சவுக்கை வெங்கடேசன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்  மூர்த்தி பாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலாளர்  துரை பாண்டியன், புளியங்குடி நகரச் செயலாளர்  பரமேஸ்வர பாண்டியன், வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன், சிவகிரி பேரூர் செயலாளர் காசிராஜன், ராயகிரி பேரூர் செயலாளர் சேவகபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

 இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் சிவஆனந்த், ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவர் மருதுபாண்டியன், மாணவர் அணி முன்னாள் மாவட்டத் தலைவர் சசிக்குமார், மாவட்டப் பிரதிநிதி பெரியதுரை, பேரூர் அவைத்தலைவர் நீராவி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய, நகர, பேரூர், கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>