பாளை கேடிசி நகரில் விஎம் சத்திரம் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

நெல்லை, டிச. 21: பாளை கேடிசி நகரில் நடந்த விஎம் சத்திரம் வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்திற்கு விஎம் சத்திரம் வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.  பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கர்ராஜ் வரவேற்றார்.

 கூட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் 24ம் தேதி இரவு முழுவதும் வணிகம் செய்ய அனுமதிப்பதோடு பாதுகாப்பும் வழங்க வேண்டும். பாளை விஎம் சத்திரம் சந்திப்பு பகுதியில் உருக்குலைந்துள்ள திருச்செந்தூர் சாலையை சீரமைப்பதோடு தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். செயின்ட் அந்தோனிஸ் நகரிலுள்ள குடியிருப்புகளுக்கு சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து 3 ஆண்டுகளுக்கான புதிய  நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக சங்கர்ராஜூ, , செயலாளராக வென்னிமலைராஜன், பொருளாளராக செல்வகுமார் தேர்வுசெய்யப்பட்டனர். இதே போல்  துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், 7  செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்டத் தலைவர் காளிதாசன், மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மீரான், மாவட்ட துணைச்செயலாளர் மாணிக்கம், மாநில இணைச்செயலாளர் சாலமோன், பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க பொருளாளர் இசக்கி, மாநில துணைத்தலைவர் பெரியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணைச்செயலாளர் கண்ணன், நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வகுமார் நன்றி கூறினர்.

Related Stories:

>