×

மரத்தில் வேன் மோதி 6 பேர் காயம்

மணப்பாறை, செப்.17: கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா செல்வதற்காக சுமார் பயணிகளுடன் மினி சுற்றுலா பேருந்து ஒன்று கடந்த 13ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டது. பேருந்தைவிரு த்தாச்சலம் பகுதியை சேர் ந்த மாரிமுத்து மகன் சரவணன்(35) ஓட்டி வந்தார். சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சென்னை நோக்கி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் வையம்பட்டிக்கு முன்னதாக புதுவாடி புதூர் அருகே நேற்று முன்தினம் இரவு வந்தபோது,

திடீரென நிலைதடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Manapparai ,Chennai ,Kerala ,Saravanan ,Marimuthu ,Thachalam ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்