×

25 மினி கிளினிக் துவக்கம்

நாமக்கல், டிச.21: நாமக்கல் நகர அதிமுக சார்பில், சந்தைப்பேட்டைபுதூர், அழகுநகர் பகுதியில் நேற்று, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவருமான சேகர் வரவேற்று பேசினார். தேர்தல் பொறுப்பாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் சட்டமன்ற தொகுதியில், 25 அம்மா மினி கிளினிக் துவங்கப்படுகிறது. நாமக்கல் அரசு மருத்துவமனையில், ரூ.50 கோடியில் பல்வேறு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.400 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவகல்லூரி தேர்தலுக்கு முன் திறக்கப்படும். நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சி மக்களுக்கு, விரைவில் தினமும் காவிரி குடி நீர் கிடைக்கும். ரூ.25 ஆயிரம் மானியத்தில் 2500 பெண்களுக்கு ஸ்கூட்டி இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங் ரோடு அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். நாமக்கல்லில் இருந்து மெட்டாலா வரை ரூ.200 கோடியில் சாலை மேம்பாட்டு பணி விரைவில் துவங்கபட இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், இயக்குனர் பொன்மணிசுரேஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அனுராதாபாலமுருகன், புவனேஸ்வரன், தேவராஜன், சண்முகம், அதிமுக பிரமுர்கள் மாணிக்கம், குமரன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mini Clinic Launch ,
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்