×

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று காலை முதல் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் திடீரென நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடற்கரையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மாமல்லபுரம் குப்பம், தேவனேரி, கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மாமல்லபுரத்தை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் நேற்று காணப்பட்டது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் நிவர் புயலால், 10 நாட்களுக்கு மேல் கடலுக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்து வந்தோம். தற்போது கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மற்றொரு புறம் அடிக்கடி புயல், கடல் சீற்றம் போன்றால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது’ என்றனர்.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...