நோயாளிகள் கடும் அவதி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை

திருச்சி, டிச.21: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் இன்று திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது குறித்து திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர், எம்எல்–்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும், திமுக தலைவர் ஆணைக்கு இணங்க இன்று (21ம் தேதி) மாலை 3 மணி அளவில் திருச்சி, சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி, மற்றும் ஒன்றிய பகுதி, நகர, பேரூர் கழக மகளிர் மற்றும் கட்சி சார்பற்ற முறையில் அனைத்து தரப்பு மகளிரையும் ஒன்றிணைந்து திரட்டி, ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி போராட்டமாக நடத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் ெதரிவித்துள்ளார்.

Related Stories:

>