ஆண்களுக்கு நாளை கு.க.

திருச்சி, டிச.21: தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முசிறி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நாளை (22ம் தேதி) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சை முடிந்தபிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம் என்று குடும்பநலம் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>