பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, டிச.21: திருச்சி ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி துர்காதேவி. இவருக்கு இதற்கு 2015ம் ஆண்டு நவம்பரில் திருமணம் ஆனது. திருமணத்தின்போது கணவருக்கு 20 பவுன் நகையும், 3 லட்சம் பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ராஜசேகர் தொடர்ந்து துர்காதேவியை நகை மற்றும் பணம் கேட்டு, அவரது குடும்பத்தோடு சேர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து துர்காதேவி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், துர்காதேவி கணவர் ராஜசேகர், அவரின் தாயார் அமிர்தம், தங்கை மாலதி, தம்பி சுரேஷ், சுரேஷ் மனைவி தங்கம் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>