விஜய் திவாஸ் தின நடை பயண பேரணி துவரங்குறிச்சி அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு வனத்துறையினரிடம் பிடிபட்டது

மணப்பாறை, டிச.21: மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள காரைப்பட்டி புதுக்குளத்தில் நேற்று ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்ட போது அப்பகுதியில் இருந்து வந்த மலைப்பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டி ஒன்றை உயிருடன் விழுங்க முயன்றது. ஆட்டுக்குட்டியின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அருகில் உள்ள கிராம மக்கள் ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு பிடியிலிருந்து மீட்டனர். பின்னர், இது குறித்து துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். துவரங்குறிச்சி வனச்சரகர் பாலசுப்பிரமணி உத்தரவின் பேரில், வனவர் முகம்மது ஆயாஸ், வனக்காப்பாளர்கள் சாமிக்கண்ணு, பாலமுருகன் உள்ளிட்டோர் புதுக்குளத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து பெரிய மலை வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 8 அடி நீளம் இருந்தது.

Related Stories:

>