×

டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

திருவாரூர், டிச. 21: டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த 29 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவாரூர், மன்னார்குடி, குடவாசல், கோட்டூரில் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இறந்த விவசாயிகளின் உருவ படங் களுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை கைவிடக்கோரி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் பல் லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 23 நாட்களாக தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடும் குளிருக்கும், நோய் வாய்ப்பட்டும் இதுவரை 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள பலியாகியுள்ளனர். விவசாயிகளின் நலனுக்காக தங்கள் இன்னுயிரை நீத்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த 30 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் திருவாரூர், மன்னார்குடி, குடவாசல் மற்றும் கோட்டூரில் நடந்தது.

திருவாரூர் புதிய ரயில்நிலையம் முன்பு திருவாரூர் அனைத்து சேவை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், குடவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், மன்னார்குடி பேரூந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, கோட்டூர் கடை வீதியில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன் ஆகியோர் தலைமையில் டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த 30 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை. சிவபுண்ணியம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், திமுக மாநில மாணவரணி துணைச்செயலாளர் சோழராஜன், நகர விவசாய அணி அமைப்பாளர் அசோகன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு இறந்த விவசாயிகளின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட  ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர்     ஜோசப்,ஒன்றிய குழு தலைவர்பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் வீரவணக்கம் செலுத்தும்  நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.க.சார்பில் நடைபெற்றது.இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் கலியபெருமாள்.விதொச. மாவட்ட துணைதலைவர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஐமாணிக்கம் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றியம் கொட்டையூர் சர்வமானியம் வெண்ணாறு பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் செந்தில் குமார்  முன்னிலையில்  வீரவணக்கம் செலுத்தப்பட்டது

Tags : peasants ,struggle ,Delhi ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...