மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேச்சு பேராவூரணியில் குடியிருப்பு பகுதியில்

பேராவூரணி, டிச.21: பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக ஆவணம் மெயின் சாலையை ஒட்டியுள்ள, சாலையில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் வௌியே சென்று வர கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகி, கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமலும், காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>