- ஓமான்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- அபுதாபி
- ஐக்கிய அரபு நாடுகள்
- ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்
- ஆசிய கோப்பை டி20
- அபுதாபி…
அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று, ஓமன் அணியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 42 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகின்றன. அபுதாபியில் நேற்று நடந்த 7வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அலிஷான் ஷரஃபு (51 ரன்), கேப்டன் முகம்மது வஸீம் (69 ரன்), அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன் குவித்தனர்.
அதன் பின் வந்தோர் சரியாக ஆடாததால், ரன் குவிப்பு வேகம் குறைந்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி, 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. அதையடுத்து 173 ரன் வெற்றி இலக்குடன் ஓமன் களமிறங்கியது. எமிரேட்சின் ஜுனைத் சித்திக் அற்புதமாக பந்து வீசி, ஓமனின் துவக்க வீரர்கள் கேப்டன் ஜதிந்தர் சிங் (20 ரன்), ஆமிர் கான் (2 ரன்) ஆகியோரை சிறிது நேர இடைவெளியில் வீழ்த்தினார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். 18.4 ஓவரில் ஓமன் 130 ரன் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. அதனால், 42 ரன் வித்தியாசத்தில் எமிரேட்ஸ் அபார வெற்றி பெற்றது. எமிரேட்ஸ் தரப்பில் சித்திக் 4 விக்கெட் சாய்த்தார்.
