அரிமளம் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு பக்கத்து வீட்டுக்காரருக்கு வலைவீச்சு

திருமயம், டிச.21:அரிமளம் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்து சென்ற பக்கத்து வீட்டுகாரரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமி(65). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டு வீட்டிற்குள் தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மூதாட்டி கழுத்தில் இருந்த சுமார் மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து அலறியடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை மூதாட்டி அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியிடம் விசாரித்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனி மகன் முருகேசன் என்பவர் கழுத்தில் செயினை பறித்து கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் உதவியுடன் லெட்சுமி கே.புதுப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>