புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றங்களை குறைக்க 24 மணி நேரமும் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்

புதுக்கோட்டை, டிச.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் இரவு நேரத்தில் ரோத்து பணியை 24 மணி நேரமும் போலீசார் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு நகராட்சிகள், ஆலங்குடி, இலுப்பூர், அன்னவாசல், கீரனூர் உள்ளிட்ட 8 பேரூராட்சிகள் உள்ளன. இதேபோல் சில கிராம பஞ்சாயத்துகளும் நகர் பகுதிபோல் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் குடிமகன்கள் சாலையின் ஓரத்தில் உள்ள பாலத்தின் சுவர்கள், ஒதுக்குபுரம் உள்ள அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நண்பர்களுடன் இணைந்து மது குடிக்கின்றனர்.

அப்போது குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி பிரச்னைகளாக மாறுகிறது. குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட்டு உயர்தேசத்தில் முடிகின்றது. ஒரு சில நேரங்களில் சில திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. இது போன்ற பிரச்னைகளை குறைக்க மாவட்டத்தில் உள்ள நகர் பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளான புதுக்கோட்டை, அறந்தாங்கி, கீரனூர், ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றது. இந்த சம்பவங்களை குறைக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் இரவு 8 மணிக்கு மேல் சாலையின் ஓரங்களில் அமர்ந்துகொண்டு குடிக்கின்றனர்.

இந்த நேரத்தில் போலீசார் ரோந்து சென்றால் போலீசை கண்டவுடன் ஓடிவிடுவார்கள். இதனால் அந்த இடத்தில் ஏற்படும் பிரச்னை குறையும். தற்போது ரோந்து பணிகளை போலீசார் செய்தாலும் ஒரு பகுதிக்கு ஒரு முறை மட்டுமே சென்று வருகின்றனர். இதனால் காவலர்கள் வரும் நேரம் அறிந்து அவர்கள் அந்த நேரத்தில் எதுவுமே நடக்காததுபோல் இருந்த பின்னர் மீண்டும் மது குடிக்கின்றனர். இதனால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதேபோல் குடிகாரர்களும் ஆங்காங்கே உள்ள பொது இடங்களில் அமர்ந்து குடிக்கின்றனர். குடித்துவிட்டு சத்தம் போடுவதும், பிரச்னை செயவதும் என அருகில் உள்ளவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இதனை குறைக்க தற்போது நடக்கும் ரோந்த பணியை 24 மணி நேரமும் அதிகரிக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>