×

பல்வேறு சம்பவங்களில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டாஸ்

பெரம்பலூர், டிச.21: ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் தண்டிக்கப்படுவார்கள் என பெ ரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், பாடாலூர், மங்களமேடு, அரு ம்பாவூர், மருவத்தூர், கை. களத்தூர், வி.களத்தூர் என பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், குற்ற சம்பவங் களில் ஈடுபட்டு சிறை செ ன்று ஜாமீனில் வெளிவந்த நபர்கள்பலரை பெரம்பலூ ர் மாவட்டக் காவல் துறை சார்பாக பெரம்பலூர் மாவ ட்ட எஸ்பி அலுவலத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பால முருகன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பெரம் பலூர் மாவட்டஎஸ்பி நிஷா பார்த்திபன் தலைமை வகி த்துப் பேசியதாவது :

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில், எதிர்பார்க்காத நிலையில் குற்ற சம்பவத்தில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். அதனை ஒரு துயர சம்பவமாகவே நினைத்து மறந்துவிட்டு, உங் களின் எதிர்காலத்தை, உங்களது குடும்பத்தை மனதில் வைத்துக்கொண்டு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் நல்ல குடிமகனாக, உங்கள் பெற்றோருக்கு சிறந்த பிள்ளையாக உருவெடுக்க முன்வர வேண்டும். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்கு ஒருபோ தும் நீங்கள் செல்லக்கூடா து. அது உங்களது எதிர்காலத்தை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் எதிர்காலத் தையும் புரட்டிப்போட்டுவி டும்.பெரம்பலூர் மாவட்டத் தில் ஏற்கனவே குற்ற சம்ப வங்களில் ஈடுபட்டு, ஜாமி னில் வெளி வந்தவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடுத்தடுத்து குற்றங்களி ல் ஈடுபடுவோரை பெரம்ப லூர் மாவட்டப் போலீசார் இ ரும்புக் கரம்கொண்டு ஒடு க்குவார்கள். குறிப்பாக ந டைபெறஉள்ள சட்டமன்ற தேர்தல் சமயங்களில் குற் ற சம்பவங்களில் ஈடுபட யா ரும் முன்வரக் கூடாது. ஏற் கனவே குற்ற சம்பவங்களி ல் ஈடுபட்டவர்கள் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட் டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை தயங்காது எனத் தெரிவித்தார்.

Tags : activities ,incidents ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி