×

செரிமானத்திற்கு அருமருந்தான ஓசூர் இஞ்சி ரூ.30க்கு கூவிகூவி விற்பனை

பெரம்பலூர்,டிச.21:பெரம்பலூரில் ஒசூர் இஞ்சி கிலோ ரூ.30க்கு கூவிக்கூவி விற்ப னை செய்கின்றனர். கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில் இஞ்சிக்கு மவுசு சற்றுக் கூடு தலாகவே அதிகரித்துள்ளது. குறிப்பாக செரிமானத்திற்கு பெயர்பெற்ற இஞ்சி மற்றும் அதன் காய்ந்த மறு உருவமான சுக்கு ஆகியவை தற்போது தொண்டை சளியை சரி செய்ய அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காகவே கட ந்த ஏழெட்டு மாதங்களாக கடைகளில் சாதாரண டீ யை பருகும் பலரும் இஞ்சி டீ குடிக்க ஆரம்பித்து விட்ட னர். இதனால் இஞ்ஜியின் தேவை அதிகரித்துள்ளது. அதோடு தற்போது கிறிஸ்துமஸ், ஜனவரி, பொங்கல் பண்டிகை சீசன் தொடங்கி யுள்ளதால் சமையலுக்கு அசைவ பிரியர்கள் அதிகம் பயன்படுத்தும் தேவை உள் ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் மேற்கு எல்லையான ஓசூர் பகுதியில் இருந்து மினி வேன்கள் மூலம் இஞ்சி பெருமளவு இறக்குமதி செய்ய ப்பட்டு வருகிறது.

இப்படி கொண்டுவரப்படும் இஞ்சி பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களில் இருந்தபடியே கிலோ ரூ.30க்கு கூவிக்கூ வி விற்கப்படுகிறது. முன் பெல்லாம் பத்து ரூபாய்க் கும் இருபது ரூபாய்க்கும் மட்டுமே கால் கிலோ அளவு க்கு உள்ள இஞ்சியை பேரம் பேசி வாங்கி செல்லும் பொதுமக்கள், தற்போது 30 ரூபாய்க்கு ஒரு கிலோ இஞ் சியை வாரி வழங்குவதால் இஞ்சி விற்பனை சூடுபிடி த்துள்ளது. குறிப்பாக சாலைகளின் ஓரத்தில் மினி வேன்களில் விற்கப்படும் இஞ்சியை பாதசாரிகள், பைக்கில் செல்லும் ஆசாமிகள் பலரும், இறங்கி சரிபார்த்து வாங்கக்கூட தேவையின்றி நின்ற உடனே எடைபோட்டு வாங்கி செல் கின்றனர். இதனால் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

Tags : Rs ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...