×

தமிழ்நாட்டில் மருத்துவ கழிவு மேலாண்மை: முறைப்படுத்த கோரி ஐகோர்ட் கிளையில் மனு

மதுரை: தமிழ்நாட்டில் மருத்துவ கழிவு மேலாண்மை வசதியை முறையாக நடைமுறைப்படுத்த கோரி வழக்கில், மருத்துவக் கழிவு குறித்து போதிய சட்ட வழிகாட்டல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐகோர்ட் கிளையில், பாதுகாப்பற்ற முறையில் மருத்துவக் கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவுகிறது என மனு தாக்கல் செய்திருந்தார்.

Tags : Tamil Nadu ,Madurai ,High Court ,Venkatesh ,Thiruparankundram, Madurai ,Court ,
× RELATED விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து...