×

கூத்தியம்பேட்டை கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வடியாததால் வெளியில் வர முடியாமல் மக்கள் அவதி

கொள்ளிடம், டிச.21: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் இரண்டு வாரங்களாகியும் வடியாததால் வீட்டைவிட்டு மக்கள் வெளியில் வரமுடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம் பேட்டை கிராமம் காமுடிகோயில் தெரு பகுதியில் குடிசை வீடுகளை கடந்த இரண்டு வார காலமாக மழை நீர் சூழ்ந்து உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளதால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் கோயிலில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை , காமுடி கோயில் தெருவில் கனமழை பெய்த காரணத்தால் கடந்த இரண்டு வாரங்களாக மழை நீர் தேங்கி கிடக்கிறது . ஆடு ஒன்றும் இறந்து விட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் பாம்பு, பூரான், மற்றும் நச்சு பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்து வருகின்றன. இதனால் மிகவும் சிரமம் அடைந்து உள்ளோம். இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் வடிய வைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : village ,Koothiyampettai ,houses ,
× RELATED விக்கிரவாண்டியில் திறந்தவெளி...