தாந்தோணிமலை நிறுத்தத்தில் நிற்காமல் வேறு இடத்தில் பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு

கரூர், டிச. 21: தாந்தோணிமலை பஸ் நிறுத்தத்தில் பேரூந்துகள் நிறுத்தாமல், மாற்று இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. திண்டுக்கல், வெள்ளியணை, பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் தாந்தோணிமலை பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் வகையில், காந்தி சிலை அருகே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான பேருந்துகள் இதன் அருகில் நிறுத்தாமல், சற்று தள்ளி, பெருமாள் கோயில் ஆர்ச் அருகே நின்று செல்வதால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆர்ச் பகுதியில் இருந்து தாந்தோணி ஒன்றியம், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் மற்றும் பெருமாள் கோயில், குறிஞ்சி நகர், ராயனூர்போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் குறுக்கிடும் போது, இடையூறாக பேருந்துகள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அருகே பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>