×

நீட் சார்ந்த படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுச்சேரி, டிச. 21: நீட் சார்ந்த படிப்புகளுக்கு திருத்தப்பட்ட சென்டாக் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நீட் சார்ந்த மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் அரசு, நிர்வாகம் மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபனை பெறப்பட்டு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சென்டாக் இணையதளத்தை பார்க்குமாறு மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 கொரோனா-19 தொற்று காரணமாக சில மாணவர்கள் சென்டாக்கில் விண்ணப்பிக்கும் போது தங்களது பழைய குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், சீட் ஒதுக்கீட்டுக்கு பிறகு வருவாய்த்துறை வழங்கிய சமீபத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சேர்க்கை நேரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...