கடும் போக்குவரத்து நெரிசல் தோகைமலை ஊராட்சி மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் தனமாலினி கந்தசாமி தலைமையில் நடந்தது

தோகைமலை டிச 21: தோகைமலை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தோகைமலை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டம் ஊராட்சி தலைவர் தனமாலினி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். செயலர் இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார். இதில் மழை காலம் என்பதால் குடிநீர் ஆபரேட்டர்களுக்கு கையுறை, டார்ச் லைட் வழங்குவது, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது என்று விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தோகைமலை ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஜே.ஜே.எம் திட்டம் மூலம் 13 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், தோகைமலை பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைப்பது உள்பட 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சண்முகம், லட்சுமணன், சரண்யா, துரைசாமி, மீனாட்சி, சமீம்பானு, மல்லிகா, அம்பிகா, மீனாம்பாள், வௌ்ளையம்மாள், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More