×

திருவையாறு அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

 

திருவையாறு, செப்.15: திருவையாறு காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ.அருள்குமார் தலைமையிலான போலீசார், திருப்பழனம் சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த திருப்பழனம் காமராஜர் நகரை சேர்ந்த கேசவன் மகன் யோகேஸ்வரன் (27) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் யோகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thiruvaiyaru ,Police Inspector ,Parthiban ,SI Arulkumar ,Kamaraj Nagar, Tiruppalanam ,Thiruvaiyaru crematorium ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த...