- பொன்னமராவதி பஞ்சாயத்து
- உன்னுடன்
- ஸ்டாலின்
- பொன்னமராவதி
- பஞ்சாயத்து
- புதுக்கோட்டை மாவட்டம்
- தமிழ்நாடு அரசு
பொன்னமராவதி,செப்15: பொன்னமராவதி பேரூராட்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 1152 மனுக்கள் பெறப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி பகுதி பொதுமக்கள் தமிழக அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்ட முகாம் கடந்த ஜூலை-18ம் தேதி முதல் கட்டமாக 1 முதல் 8வது வார்டு வரை உள்ள பொதுமக்களுக்கு வலையபட்டி நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
