×

அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு யாகம்

 

நாமக்கல், செப்.15: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணப்பள்ளியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்ற சிறப்பு யாகம் நடந்தது.
இதையொட்டி, மணப்பள்ளி காவிரி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து, பெரியசாமிக்கு வேல் பிரதிஷ்டை மற்றும் அங்காள பரமேஸ்வரிக்கு கத்தி பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, லட்சுமி, அஸ்திர ஹோமம் நடந்தது. இதையடுத்து, தோரண வாயில் அபிஷேகம், பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்பொதுக்கள் செய்திருந்தனர்.

Tags : Angala ,Parameswari Temple ,Namakkal ,Angala Parameswari Amman Temple ,Manapalli ,Mohanur ,Manapalli Cauvery River ,
× RELATED பிரபல கொள்ளையன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு