×

ராஜபாளையத்தில் கலப்பு விதைகளால் கலங்கும் விவசாயிகள்

ராஜபாளையம், டிச. 21:  ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்ட நெல் வயல்களில் கலப்பு விதைகள் அதிகம் இருப்பதால் நெல் விலை போகாது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது நெல் விவசாயம் அதிக அளவு நடந்து வருகிறது. நெல் கதிர்விடும் நிலையில் பயிர்களுக்கு நடுவே அதிக களைகளோடு கலப்பு விதைகளும் கதிர் விட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட ரக நெல் வகைகளை நாற்றங்காலில் பயிரிட்டு வரும்போது சில கலப்பு விதைகளும் சேர்ந்து பிடுங்கி நட்டதால் தற்போது களைஎடுக்கும்  பருவத்தில் அந்த விதைகளும் கதிர் விடத் தொடங்கியுள்ளது. இதனால் களைகளோடு சேர்த்து அதிக அளவு முளைத்துள்ள கலப்பு விதை கதிர்களையும் சேர்ந்து பிடுங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவு  ஏற்படும், நெல் அறுவடையின் போது ஒரே ரக நெல் இல்லாமல் கலப்பு விதைகளுடன் இருந்தால் குறைந்த விலைக்கு நெல் விற்பனையாகும். எனவே, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு தமிழக வேளாண்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  தரமான நெல் விதைகளை தமிழக அரசே குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!