தேவாரம் பகுதியில் 500 ஹெக்டேரில் சாகுபடி பூக்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவாரம், டிச. 21: தேவாரம் பகுதியில் 500 ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்யப்படுவதால், பூக்களை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க, துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேவாரம் பகுதியில் சில்லமரத்துப்பட்டி, போ.மீனாட்சிபுரம், தேவாரம், பல்லவராயன்பட்டி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மல்லிகை, செவ்வந்தி, அரளி, கோழிக்கொண்டை, பிச்சிப்பூ, கனகாம்பரம் உளளிட்ட பூ வகைகள் சுமார் 500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பூக்களை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உள்ளூர் விஷேசங்கள், வெளியூர் விஷேசங்களுக்கும் வாங்கிச் செல்கின்றனர். அதிக முகூர்த்த நேரங்களில் 1 கிலோ மல்லிகைப் பூக்கள் ரூ.1000க்கு விற்கப்படுகிறது. ஆனால், முகூர்த்தம் அல்லாத நேரங்களில் கிலோ ரூ.10 வரை குறைகிறது. இதனால், சாகுபடி செய்யும் விவசாயிகள், விற்கும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பூக்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய, குளிர்பதன கிடங்கு அமைக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: