×

பரமக்குடி தொகுதியில் அதிமுக பாசறை நிர்வாகிகள் ஆலோசனை

பரமக்குடி, டிச.21: பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி ஒன்றிய அளவிலான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார், இளைஞர் பாசறை நிர்வாகிகளுக்கு ஆடைகளை வழங்கி பேசியதாவது:- ‘‘சட்டமன்ற தேர்தலில் ராணுவ வீரர்கள் போல் பணியாற்றவேண்டும்.

இளைய சமுதாயத்திற்கு அ.தி.மு.க அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ரூ.2500 ஆயிரம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீர் மேலாண்மை நிர்வாகம், புயல் நிவாரணப் பணி தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறையிலும் தமிழகம் முன்மாதிரி முதன்மை மாநிலமாக திகழ்கிறது’’ என்று பேசினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள்நாகநாதன்,குப்புசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயலானி சினிக்கட்டி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஜெயஜோதி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,cadres ,constituency ,Paramakudi ,
× RELATED அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன்...