×

குடிநீர் வருவதில் தடையுள்ளதால் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.21: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10,11 மற்றும் 12வது வார்டுகளில் உள்ள தெருக்களான முகமது கோயா தெரு, இக்பால் தெரு, குட்லுநகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு வழங்கப்பட்டும் அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி சரிவர கிடைப்பதில்லை. பேரூராட்சியில் முறையிட்டால் அப்பகுதி மேடான பகுதியாக உள்ளதால் நீர்வரத்து சரிவர வருவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது என்று காரணம் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி கூறுகையில், ‘‘ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையால் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகள் மேட்டுப்பகுதியாக இருப்பதால் அப்பகுதிக்கு தண்ணீர் சீராக சென்றடைவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தான் அப்பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அங்கு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் தண்ணீர் உவர்பாக போய்விட்டது. ஆகையால் அந்த பகுதிகளுக்கு தற்பொழுது ஒரு முறை விட்டு, ஒரு முறையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் சீராக குடிதண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அவை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் விரைவில் அப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்’’என்றார்

Tags : public ,reservoir ,
× RELATED அதிகரித்து வரும் வெயில்...